வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, நாளை (ஜூன்.24) அரசு முறைப்பயணமாக எகிப்து செல்கிறார்.
கடந்த ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கு வருமாறு எகிப்து அதிபர் அப்தெல் பதா அல்சிசிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து எகிப்து அதிபர் பங்கேற்றார்.
இந்நிலையில் தனது முதல் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி எகிப்து செல்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் இதுவரை எகிப்து நாட்டிற்கு சென்றதில்லை.
பிரதமர் மோடியின் முதல் முறையாக எகிப்து செல்கிறார். இந்த பயணத்தின் போது எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா அல் சிசியை சந்தித்து இரு நாடுகளிடையே பரஸ்பரம், நட்புறவு, முதலீடு, வர்த்தகம் , ராணுவம் பல்வேறு துறைகள் குறித்து விவாதிக்கிறார்.
இது குறித்து எகிப்துக்கான இந்திய தூதர் அஜித் குப்தா கூறியது, மோடியின் இந்த பயணத்தின் போது கெய்ரோவில் உள்ள ஹெ லியோபோலிஸ் போர் நினைவு சின்னத்தையும், 11-ம் நூற்றாண்டின் பழமையான அல்ஹகீம் மசூதியை பார்வையிடுகிறார் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement