சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். திருமுருகன் இயக்கிய இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து போஸ் வெங்கட் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஆரம்பித்தார்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் போஸ் வெங்கட். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என சினிமாவில் கலக்கி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் போஸ் வெங்கட்.
அவரது இயக்கத்தில் வெளியான இந்தப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டும் போஸ் வெங்கட், திமுக தலைமைக் கழக பேச்சாளராகவும் உள்ளார். இவர் திரைத்துறையை சேர்ந்த சோனியாவை திருமணம் செய்து கொண்டார். இவரும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
Thangalaan: திருப்பத்தை கொடுத்துள்ளது.. ‘தங்கலான் குறித்து சூப்பரான மேட்டர் சொன்ன பார்வதி.!
இந்நிலையில் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த சோக சம்பவங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் நிலைகுலைய செய்துள்ளது. அதாவது போஸ் வெங்கட்டின் சகோதரி நேற்று காலை மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலே அவரது சகோதரர் ரங்கநாதனும் உயிரிழந்துள்ளார்.
Hansika: உடல் எடையை குறைக்க ஆபரேஷனா.?: ஹன்சிகா என்ன சொல்லிருக்காங்க பாருங்க.!
ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் சகோதர, சகோதரியை பறிகொடுத்து விட்டு தவிக்கும் போஸ் வெங்கட்டிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
View this post on InstagramA post shared by Sonia Bose (@soniabose26)
View this post on InstagramA post shared by Bose Venkat (@official.bosevenkat)