மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஏறாவூர் SSC அணி சம்பியன் பட்டம் வென்றது.
மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பத்மநாபா ஞாபகார்த்த அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் 32 கால்பந்தாட்ட அணிகளுடன் நொக்கவுட் முறையில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக சுற்றுப்போட்டி இடம்பெற்றுவந்த நிலையில் இறுதி போட்டி நேற்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி போட்டியில் ஏறாவூர் எஸ்.எஸ்.சி கழக அணியினரும் கஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும் மோதிக்கொண்டனர். இதன்போது ஏறாவூர் எஸ்.எஸ்.சி கழக அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 ஆண்டு சவால் கிண்ணத்தை எஸ்.எஸ்.சி விளையாட்டு கழகம் சுகிகரித்துக்கொண்டது.