புதுடில்லி: பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப், லாகூர், பெஷாவார் ஆகிய மாகாணங்களில் சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் பெஷாவரில் , மன்மோகன்சிங் 24 என்ற சீக்கிய இளைஞரை மர்ம கும்பல் கடந்த 24-ம் தேதியன்று தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, டில்லியில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனரை அழைத்து கண்டனம் தெரிவித்ததுடன், சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement