தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழைஇந்தியாவின் தென்மேற்கு பருவமழை கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் பகுதிகளில் மே மாதம் 20 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தியாவில் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பருவமழை ஜூன் 4ஆம் தேதிக்குள் தொடங்கினால் உரிய காலத்தில் தொடங்கியதாக எடுத்துக்கொள்ளப்படும்.
லண்டனில் இந்திய மனநல மருத்துவருக்கு 6 ஆண்டுகள் ஜெயில்… எதுக்கு தெரியுமா?
ஜூன் 8 ஆம் தேதி பருவமழைஅதுவே 5ஆம் தேதிக்கு மேல் தொடங்கினால் தாமதாக தொடங்கியதாக கருதப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கியதால் தாமதமாகவே தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருப்பினும் சராசரி மழை பொழிவில் எந்த குறையும் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது. கேரளா மற்றும் குமரி முனை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதுமே அரபிக்கடலில் பிபர்ஜாய் புயல் உருவானது.
கண்துடைப்பு… செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கல.. பகீர் கிளப்பும் பிரமேலதா விஜயகாந்த்!80 சதவீத பகுதிகளில்இந்த புயல் குஜராத்தின் ஜக்காவு துறைமுகத்தில் கரையை கடந்தது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே கன மழை கொட்டித் தீர்த்தது. தற்போது கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் 80 சதவீத பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 40 வயசா… நம்பவே முடியாது… மகளுடன் க்யூட் போட்டோ ஷூட் நடத்திய ஷ்ரேயா!
62 ஆண்டுகளுக்கு பிறகு62 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மற்றும் தலைநகர் டெல்லியில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது மும்பை மற்றும் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது. வழக்கமாக மும்பையில் பருவமழை தொடங்கிய இரண்டு வாரங்கள் கழித்துதான் தலைநகர் டெல்லியில் பருவ மழை தொடங்கும். ஆனால் இம்முறை மும்பையில் 2 வாரங்கள் தாமதமாகவும் டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பாகவும் பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலினிடம் புகார் கூறிய பிசி ஸ்ரீராம்… ஓடி வந்து வருத்தம் தெரிவித்த தங்கம் தென்னரசு!இயல்பை விட குறைவுஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் வரும் நாட்களில் பருவமழை தீவிரம் அடையும் என்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை மைய ஆய்வுத் துறையின் (IMD)துணை இயக்குநர் ஜெனரல் கே.எஸ்.ஹோசாலிகர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பருவமழைக்கு சாதகமான சூழல் இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு இயல்பை விட 23 சதவீதம் குறைவாக உள்ளதாக கூறியுள்ளார்.
புதிய டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமி இப்படிப்பட்டவரா? சல்யூட் அடித்த கஸ்தூரி!கனமழை மழை எச்சரிக்கைமும்பை மற்றும் தானேவை உள்ளடக்கிய கொங்கன் பகுதி முழுவதும் அடுத்த 3-4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹோசாலிகர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 70 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மனைவியுடன் தகாத உறவு.. நண்பனின் கழுத்தையறுத்து ரத்தம் குடித்த கணவர்.. நடுங்கிப் போன கர்நாடகா!பிபர்ஜாய் புயலால் உபரி மழைமேலும் மத்திய இந்தியாவில் தற்போது 60 சதவீதம் பருவமழை பற்றாக்குறை உள்ளது என்றும், தென்னிந்தியாவில் 58 சதவீதம் பருவமழை பற்றாக்குறை உள்ளது என்றும் ஹோசாலிகர் கூறியுள்ளார். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் 18 சதவீதம் பருவமழை பற்றாக்குறை உள்ளது என்றும், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் ஹோசாலிகர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பிபர்ஜாய் புயலால் 37 சதவீத உபரி மழை பெய்துள்ளது.
செந்தில் பாலாஜி.. 5 நாட்களுக்கு பிறகு வந்த நல்ல சேதி… காவேரி மருத்துவமனை முக்கிய தகவல்!