புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 1975-ம்ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனத்தை (எமர்ஜென்சி) அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று ஜூன் 25-ம் தேதி என்பதால் எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி காலம் மறக்க முடியாதது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஜனநாயகத்துக்கு எதிராக அறிவிக்கப்பட்டது. இருண்ட காலமாக இருந்த எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்த போராடிய அனைத்து தலைவர்களுக்கும் தலை வணங்குகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.