புதிய டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமி இப்படிப்பட்டவரா? சல்யூட் அடித்த கஸ்தூரி!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது, மற்றும் உடல் நலக்குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதால் அவரிடம் இருந்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் அவர் வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி குறித்து திமுகவின் சுற்றுசூழல் பிரிவின் செயலாளரான கார்த்திகேய சிவசேனாபதி தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் 1980களில் பெற்றோரால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளை அமைச்சர் முத்துசாமி, அவருடைய மனைவி மற்றும் அவருடைய தாயார் ஆகியோர் தங்கள் பிள்ளைகளாக எந்த பாரபட்சமும் இன்றி வளர்த்து, இன்று இருவருக்கும் ஒரே நிகழ்வாக திருமண நிச்சயதார்த்தம் நடத்தி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெற்றோரால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளை அமைச்சர் முத்துசாமி தத்தெடுத்து அவர்களை இத்தனை ஆண்டுகளாக படிக்க வைத்து வளர்த்து இன்று தகப்பனாக தனது கடமையை செய்துள்ளதாகவும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். மேலும் அவரை இருகரம் கூப்பி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கார்த்திகேய சிவசேனாபதியின் இந்த பதிவை நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் புதிய டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமி இப்படிபட்டவரா? என கேட்டுள்ள நடிகை கஸ்தூரி, அவர் நல்லுள்ளதிற்கு சல்யூட் என்றும் பதிவிட்டுள்ளார்.

அதோடு இந்த பதிவை ஷேர் செய்த கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அந்த பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துகள் என்றும் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் நெட்டிசன்கள் பலரும் அமைச்சர் முத்துசாமியின் மனிதாபிமானத்தையும் அவருடைய நல்ல மனதையும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.