புதுடில்லி: புதுடில்லியில் சாலையில் நடந்து சென்ற தம்பதியை வழிமறித்த கொள்ளையர், அவர்களிடம் எதுவும் இல்லாததால், 100 ரூபாய் கொடுத்து சென்ற வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுடில்லியில், ஷாதாரா நகரில் உள்ள பார்ஷ் பஜார் என்ற பகுதியில், சமீபத்தில் இரவு நேரத்தில் கணவனும், மனைவியும் நடந்து சென்றனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், அந்த தம்பதியை மறித்தனர். அவர்களிடம் வழிப்பறி செய்வதற்காக சோதனை செய்ததில், வெறும் 20 ரூபாய் மட்டுமே அவர்களிடம் இருந்தது.
இதையடுத்து, செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு அவர்களிடம் 100 ரூபாய் கொடுத்து, கொள்ளையர் வாகனத்தில் சென்றனர். இது குறித்து, போலீசில் அந்த தம்பதி புகார் அளித்தனர்.
இதன்படி வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட தேவ் வர்மா, ஹர்ஷ் ராஜ்புட் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 30 மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement