ஆதி புருஷ் படத்தை கலாய்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். ஒரு சில வாரத்திற்கு முன்பு திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு தரப்பினர் கொண்டாடினாலும் மற்றொரு தரப்பினர் படத்தின் கிராபிக்ஸ் சரியில்லை, அவர்களின் தோற்றம் மற்றும் வசனங்கள் குறித்து விமர்சனம் எழுந்தது. இதனால் படத்தின் வசூலும் சற்றென்று குறைந்தது. இந்தநிலையில் ஆதி புருஷ் படத்தை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அவரது டுவிட்டரில் “ஆதி புருஷ் பார்த்த பிறகு தான் புரிந்தது பாகுபலி படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.