பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டிற்கு ஏற்ற மனித வள முகாமைத்துவத் திட்டத்தை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட பணிப்பாளர் குழுவின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று (26) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் நிரஞ்சன் டி. குணவர்தன, தொழில் அமைச்சின் செயலாளர் ஆர். பி. ஏ. விமலவீர, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தலைவர் பி.கே.யு.விக்ரமசிங்க, இலங்கை மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.ஏ. லலிததீர, தேசிய கல்வி ஆணைக்குழுவின் பேராசிரியர் எச். அபேகுணவர்தன, நைட்டா நிறுவனத்தின் தலைவர் ருச்சிக அமரசேகர, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மனித வள நிறுவனத்தின் தலைவர் துசித வணிகசிங்க, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த ரத்னசேகர, ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஹிலரி சில்வா, சனச முகாமைத்துவ பணிப்பாளர் முதிதா கிரிவன்தெனிய, வங்கியியல் கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். சி. வி. ராஜநாதன் ஆகியோர் இந்த பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
BIMSTEC அமைப்பின் (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு) எதிர்கால செயற் திட்டத்தை தயாரிப்பதிலும் இலங்கை மனித வள முகாமைத்துவ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் ஊடகப் பிரிவு