ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Superstar Rajinikanth: அண்ணாமலை படம் ரிலீஸாகி 31 ஆண்டுகள் ஆனதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அண்ணாமலைசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா உள்ளிட்டோர் நடித்த அண்ணாமலை படம் கடந்த 1992ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான Khudgarz இந்தி படத்தின் ரீமேக் தான் அண்ணாமலை. அந்த வெற்றிப்படம் ரிலீஸாகி இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகிவிட்டது.கொண்டாட்டம்வெற்றிப் படம்அண்ணாமலை படத்தில் பால்காரராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ரஜினிகாந்த். அவர் குஷ்புவின் விடுதிக்குள் சென்றபோது பாம்பு வர ரஜினி பயந்த காட்சி இன்றளவும் பிரபலம். உயிர் நண்பனே விரோதியாக மாற அண்ணாமலை தன் வாழ்க்கையில் எப்படி போராடி முன்னுக்கு வருகிறார் என்பது தான் கதை. ரஜினி, குஷ்பு இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பக்கபலமாக இருந்தது.பணம்பணம் தான் இங்க எல்லாமேஅறைந்த சரத்பாபுஅண்ணாமலை படத்தில் நண்பன் சரத்பாபுவின் அப்பாவாக நடித்த ராதாரவியை அறைந்துவிடுவார் ரஜினி. பதிலுக்கு ரஜினியின் கன்னத்தில் அறை விடுவார் சரத்பாபு. அந்த காட்சியில் வேறு எந்த நடிகராவது நடித்திருந்தால் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்திருந்திருப்பார்கள். ஆனால் அது சரத்பாபு என்பதால் தலைவர் ரசிகர்கள் அமைதியாக இருந்தார்கள்.
ரஜினி ரசிகர்கள்அண்ணாமலை படப்பிடிப்பு தளத்தில் வைத்து சரத்பாபுவிடம் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது,
வேறு ஒரு நடிகராக இருந்தால், ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகப் போகிறீர்கள், ஜாக்கிரதை என்பேன். ஆனால் நீங்கள் ரஜினியை அறைந்தால் அவர் ரசிகர்களுக்கு பிரச்சனை இல்லை என நினைக்கிறேன் என்றார். இந்த தகவலை சரத்பாபு ஒரு முறை தெரிவித்தார்.
Kamal Haasan:திடீரென்று கமல் செய்த காரியம்: யோகிபாபுவை ஹீரோவாக்கும் ஹெச்.வினோத்?
ரஜினி சரத்பாபு அண்மையில் காலமானார். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அண்ணாமலை படத்தில் ஒரு பெரிய டயலாக். அந்த வீட்டில் வந்து சவால் விடணும். 10, 15 டேக் ஆச்சு. சரியா வரல. எமோஷன் சரியாக இல்ல. அப்போ சரத்பாபுவோ ரஜினி இங்க உட்காருனு சொல்லிட்டு, ஒரு சிகரெட் கொடுத்தார். அந்த சிகரெட் சாப்பிட்ட பிறகு ரிலாக்ஸா டேக் ஓகே ஆச்சு. அவர் என் மீது வைத்திருந்த அன்புக்காக சொல்கிறேன். நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றார்.
Nayanthara:நயன்தாராவுக்கு கோடி, கோடியா கொட்டப் போகுது: சூப்பர் ஐடியா கொடுத்த விக்னேஷ் சிவன்
சரத்பாபு பேட்டிஅண்ணாமலை படத்தில் ரஜினியை அறைந்தது பற்றி சரத்பாபு முன்பு கூறியதாவது, நீங்கள் ரஜினி சாரை தாராளமாக அறையலாம். அவரின் ரசிகர்கள் கோபப்பட மாட்டார்கள். உங்களால் மட்டும் தான் முடியும் என அண்ணாமலை படத்தில் நடித்தபோது நிழல்கள் ரவி என்னிடம் கூறினார் என்றார். அண்ணாமலை படத்தில் ரஜினியின் தங்கையின் கணவராக நடித்திருந்தார் நிழல்கள் ரவி.
Arjun: அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும் யாரால் சந்தித்து காதலிச்சாங்கனு தெரியுமா?
ட்விட்டர் டிரெண்ட்அண்ணாமலை படம் பற்றி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். தங்களுக்கு பிடித்த காட்சி, பாடல் வீடியோக்களை ஷேர் செய்கிறார்கள். இதனால் #Rajinikanth என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அண்ணாமலை மாதிரி ஒரு படம் இனிமேல் வருமா என ரசிகர்கள் ஃபீலிங்குடன் கூறுகிறார்கள்.