சென்னை: பழம் பெரும் நடிகை லட்சுமி மற்றும் மதுபாலா நடிக்கும் ஸ்வீட் காரம் காபி என்ற புது வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்தியாவில் கேபிள் டிவிக்கு வேட்டு வைத்த OTT தளங்கள் தற்போது பல பரிமானத்தில் உருவெடுத்து ஒட்டுமொத்த எண்டர்டெயின்மென்ட் துறையை ஆட்டி வைத்து வருகிறது
ஓடிடி தளங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் தொடர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
ஸ்வீட் காரம் காபி: இந்த வகையில் மூன்று இயக்குநர்கள் சேர்ந்து இயக்கிய ஸ்வீட் காரம் காபி இணையத் தொடரில், மதுபாலா, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ளனர். எட்டு எபிசோட்கள் கொண்ட இத்தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஜூலை 6ம் தேதி முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது.
மூன்று இயக்குநர்கள்: பல தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணமாக இது அமைந்துள்ளது. லயன் டூத் ஸ்டூடியோஸ் சார்பில் ரேஷ்மா கட்டாலா தயாரித்துள்ள ஸ்வீட் காரம் காபி என்ற புதிய இணையத் தொடர் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் என மூன்று இயக்குநர்கள் இணைந்து இயக்கி உள்ளனர்.
குவியும் பாராட்டு: இத்தொடர் குறித்து பேசிய தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலா, ‘ஸ்வீட் காரம் காபி’ தொடர் ஒரு குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் பிணைப்பை எடுத்து காட்டும் தொடராக உள்ளது. மூன்று வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள் குறித்து பேசும் இத்தொடரை பிஜாய், கிருஷ்ணா மற்றும் சுவாதி ஆகியோர் அழகாக இயக்கியுள்ளனர். லட்சுமி, மதுபாலா மற்றும் சாந்தி ஆகியோரின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின்: கமல்ஹாசன் இயக்கிய உன்னை போல் படத்தில் தலைமைச் செயலாளராக நடித்த நடிகை லட்சுமி நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். பெண்களை மையப்படுத்திய கதை என்பதால், இந்த இணையத் தொடரில் நடித்துள்ளார். அண்மையில் இவர் இறந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.