சோசியல் மீடியாவை கலக்கும் டூப்ளிகேட் பிரணவ் மோகன்லால்

பெரும்பாலும் எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் அவரது உருவத்தோற்றம் போலவே சாயல் கொண்டவர்கள் அவ்வப்போது டிக்டாக் வீடியோக்கள் மூலமாக தங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. குறிப்பாக பிரபல நடிகைகள் போன்று உருவ தோற்றம் கொண்ட பெண்கள், அந்த நடிகைகள் நடித்த வசனங்கள், பாடல்கள் என இமிடேட் செய்து வீடியோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். நடிகைகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் நடிகர்களுக்கும் ஓரளவுக்கு நகல்கள் இருக்கவே செய்கின்றனர்.

கமல் போன்ற உருவ தோற்றம் கொண்ட ஒருவர், ட்ரெட் மில்லில் கமலை போலவே நடனமாடி, கமலிடமே பாராட்டை பெற்றார். அதேபோல மலையாளத் திரையுலகின் இளம் நடிகர்களான துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோரின் உருவத்தோற்றம் கொண்ட லுக் அலைக் நபர்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு பிரபலமானார்கள். இந்த நிலையில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் போலவே தோற்றம் கொண்ட பிரதாப் கோபால் என்பவர் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலமாகி வருகிறார்.

பெங்களூருவை சேர்ந்த இவர் முதன்முறையாக ஒரு பெண் தன்னைப் பார்த்து நீங்கள் பிரணவ் மோகன்லால் போல இருக்கிறீர்கள் என கூறியதை தொடர்ந்து தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட துவங்கினாராம். பலரும் அதேபோன்ற கருத்தையே கூறினார்களாம். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் சமீபத்தில் கேரளாவிற்கு வந்திருந்த பிரதாப் கோபால் மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள தனது நண்பரின் அழைப்பை ஏற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கும் வருகை தந்துள்ளார்.

மோகன்லால் மற்றும் அவரது மகன் பிரணவ் இருவரையும் சந்திக்க விரும்பும் பிரதாப் கோபால் தன்னை பார்க்கும்போது அவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.