Naa ready: நா ரெடி சர்ச்சை..தளபதி கொடுத்த ஐடியா..லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இதுவரை லியோ படத்தை பற்றிய பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே பரவி வந்த நிலையில் நா ரெடி பாடலுக்கு பிறகு நிலைமையே தலைகீழாக மாறியது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இருந்து நா ரெடி என்ற பாடல் வெளியானது.

விஜய்யே இப்பாடலை பாடிய நிலையில் லோகேஷின் உதவி இயக்குனர் விஷ்ணு இப்பாடலை எழுதியிருந்தார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் இப்பாடலை ரசித்தார்கள். வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் பல சாதனைகளை இப்பாடல் முறியடித்தது.

நா ரெடி சர்ச்சை

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இப்பாடலுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. நா ரெடி என்ற பாடலில் விஜய் புகைபிடிப்பதும், பாடல் வரிகள் சில ரசிகர்களை தவறான வழியில் வழிநடத்தும் வகையில் இருப்பதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர். அதுவும் விஜய்யை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்தொடரும் நிலையில் அவர் இதுபோன்ற ஒரு பாடலில் நடித்தது கண்டிக்கத்தக்கது எனவும், அப்பாடலை படத்தில் இருந்து நீக்கும் படியும் கேட்டு வருகின்றனர்.

Maaveeran: மாவீரன் படத்திற்காக விஜய் வழியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்..ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

நாளுக்கு நாள் இப்பாடலுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இது ஒருபக்கம் லியோ படத்திற்கு பப்லிசிட்டியாக இருந்தாலும் மறுபக்கம் விஜய்யின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இதையெல்லாம் கவனித்த விஜய் இப்பாடலில் இடம்பெறும் சில சர்ச்சையான வரிகளையும் காட்சிகளையும் நீக்குமாறு லோகேஷிடம் கூறியுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

லோகேஷ் எடுத்த முடிவு

இதையடுத்து லோகேஷ் நா ரெடி பாடலில் சில திருத்தங்களை செய்து திரையி வெளியிட முடிவெடுத்துள்ளாராம். புகைபிடிப்பது போன்ற காட்சிகளையும், மது அருந்துவது போல இடம்பெறும் காட்சிகளையும் முடிந்த அளவு நீக்க முடிவெடுத்துள்ளார் லோகேஷ். குறிப்பாக சில சர்ச்சையான வரிகளையும் நீக்கிவிட்டு வேறு வரிகளை போடவும் லோகேஷ் முடிவெடுத்துள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. படம் வெளியான பின்னர் தான் இப்பாடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என தெரியவரும். இந்நிலையில் விஜய் தன் போர்ஷனை நாளையுடன் முடிக்க இருக்கின்றார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் தகவல்கள் வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.