ஹைதராபாத்: டேலிவுட் ஸ்டார் மகேஷ் பாபு பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள விலையுயர்ந்த தங்க நிற ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி உள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் மகேஷ் பாபு. இவருக்கு ஆந்திராவில் மட்டுமில்லாமல் தமிழகம், கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்
இவரது திரைப்படங்களுக்கும் என்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு.இவர் டேலிவுட்டின் தனிப்பெரும் சக்தி வாய்ந்தவராகவே இருக்கிறார்.
மகேஷ்பாபு: தெலுங்கு சினிமாவில், சிரஞ்சீவிக்கு பிறகு ஆந்திரா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. பார்வையால் மிரட்டுவது, ஷார்ப்பான லுக், ரொமாண்டிக்கான பேச்சு மகேஷ்பாபுவின் தனி ஸ்டைல். இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தமிழில் போக்கிரி, கில்லியாகவும் வெளியாகி சக்கை போடு போட்டது.
குண்டுர் காரம்: மகேஷ்பாபு புதிய நடிக்கும் படத்திற்கு குண்டுர் காரம் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அல்லு அர்ஜூனை வைத்து ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு பெங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
ரெஞ்ச் ரோவர் எஸ்வி கார்: இந்நிலையில், கார் பிரியரான நடிகர் மகேஷ் புதிய ரெஞ்ச் ரோவர் எஸ்வி காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 5.4 கோடி ஆகும். ரெஞ்ச் ரோவர்ஸ் நீண்ட காலமாக பிரபலங்களின் விருப்பமான காராக இருந்து வருகிறது, மோகன்லால், ஜூனியர் என்டிஆர் மற்றும் சிரஞ்சீவி போன்ற பிரபலங்களின் வரிசையில் தற்போது மகேஷ்பாபுவும் இணைந்துள்ளார்.
தங்க நிறம்: பல நடிகர்கள் இந்த காரை வைத்து இருந்தாலும், மகேஷ் பாபுவின் காரில் தனிச்சிறப்பாக தங்க நிறம் உள்ளது. இந்த கார் ஹைதராபாத் தெருக்களில் வலம் வரும் போது நிச்சயமாக அனைவரின் பார்வையும் இந்த காரின் மீதே இருக்கும்.