Keerthy suresh: அரசியலில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் ? அதுவும் இந்த கட்சியிலா ?தீயாய் பரவும் தகவல்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் கீர்த்தி சுரேஷ். என்னதான் இப்படத்தில் கீர்த்தியின் அழகையும் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டினாலும் இப்படம் வெற்றிபெறவில்லை. எனவே கீர்த்தி சுரேஷிற்கு அடுத்த படவாய்ப்பு கிடைக்க சற்று தாமதமானது.

இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதைத்தொடர்ந்து ரெமோ, பைரவா, தொடரி, சர்க்கார் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார் கீர்த்தி சுரேஷ்.

அரசியலில் கீர்த்தி சுரேஷ்

மேலும் மகாநதி என்ற படத்தில் நடிகை சாவித்திரியாகவே வாழ்ந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறி வருகின்றார். மேலும் குறைவான படங்களில் மட்டுமே கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றார்.

Maaveeran: மாவீரன் படத்திற்காக விஜய் வழியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்..ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

இதன் காரணமாக அவர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் எனவும் வதந்திகள் பரவின. இதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் கடந்த பல ஆண்டுகளாக கேரளாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அவரை தான் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்றும் செய்திகள் வந்தன.

ஆனால் இதனை கீர்த்தி சுரேஷின் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இந்நிலையில் இதுபோல தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது கீர்த்தி சுரேஷ் விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கிறாராம். மேலும் இவர் திமுக கட்சியில் இணையப்போகின்றார் என்றும் பேசப்பட்டு வருகின்றது.

தீயாய் பரவும் தகவல்

தற்போது மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக வதந்திகள் பரவின. இதுபோல தான் சில வருடங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் ஆந்திராவில் தன் அரசியல் பயணத்தை துவங்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அது வெறும் வதந்தியாகவே முடிந்துவிட்டது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதுபோல தற்போதும் கீர்த்தி சுரேஷ் அரசியலில் களமிறங்கவுள்ளார் என பேசப்பட்டு வருகின்றது. எனவே இந்த தகவல் உண்மையா இல்லை வதந்தியா என்பதை கீர்த்தி சுரேஷ் தான் கூறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.