ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Umapathy Ramaiah, Aishwarya Arjun love story:தன் மகன் உமாபதிக்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என தம்பி ராமையா கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா அர்ஜுன்ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலிப்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். அவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள். அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும் எங்கு சந்தித்தார்கள், அவர்களுக்கு எப்படி காதல் வந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஜி.பி. முத்துபடத்துல எனக்கு நல்ல கேரக்டர் குடுத்தாங்கதம்பி ராமையாஉமாபதி, ஐஸ்வர்யா பற்றி பலர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு தம்பி ராமையா பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் டிவி ரியாலிட்டி ஷோவில் என் மகன் உமாபதி போட்டியாளராக கலந்து கொண்டார். அப்படித் தான் அவருக்கு ஐஸ்வர்யா அர்ஜுனின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது என்றார்.
Arjun: அர்ஜுன் மகளுக்கும், தம்பி ராமையா மகனுக்கும் எப்படி பழக்கம், திருமணம் எப்பொழுது?:விபரம் இதோ
ஆஞ்சநேயர் கோவில்அர்ஜுன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். தனக்கு பிடித்த ஆஞ்சநேயருக்கு பிரமாண்டமாக கோவில் கட்டினார். அநத் கோவில் திறப்பு விழாவின்போது தான் அர்ஜுன் குடும்பத்தாரும், தம்பி ராமையாவின் குடும்பத்தாரும் சந்தித்து பேசி திருமணத்தை உறுதி செய்தார்களாம். 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐஸ்வர்யா, உமாபதி திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தம்பி ராமையா கூறியுள்ளார்.
திருமண தேதிதிருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. தேதி முடிவானதும் அறிவிக்கிறோம். அந்த தேதியை என் மகன் உமாபதியின் பிறந்தநாள் அன்று அறிவிப்போம் என தம்பி ராமையா தெரிவித்துள்ளார். அர்ஜுன் வீட்டிலும், தம்பி ராமையா வீட்டிலும் காதலை ஏற்றுக் கொண்டது தான் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. காதல் என்றால் கண்டபடி கத்தும் அப்பாக்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் விருப்பமே முக்கியம் என அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் அர்ஜுன், தம்பி ராமையாவை நினைத்தால் பெருமையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கெரியர்விஷாலின் பட்டத்து யானை படம் மூலம் நடிகையான ஐஸ்வர்யா அர்ஜுன் அடுத்ததாக ஒரு படத்தில் நடித்தார். அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. பெரிய படிப்பு படித்தவர் அதற்கு ஏற்றது போன்று வேலை செய்யட்டும் என்கிறார்கள் ரசிகர்கள். அதாகப்பட்டது மகாஜனங்களே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் உமாபதி. கோலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இளையராஜா செய்யாததை ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு செய்தார்: வடிவேலு
அர்ஜுன்ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்து அர்ஜுன் இதுவரை எதுவும் சொல்லவில்லை. அவர் லோகேஷ் கனகராஜின் லியோ பட வேலையில் பிசியாக இருக்கிறார். லியோ படத்தில் தளபதி விஜய்யின் அண்ணனாக அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் விஜய்யின் வில்லன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எந்த தகவலையும் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்யவில்லை.
Nayanthara:நயன்தாராவுக்கு கோடி, கோடியா கொட்டப் போகுது: சூப்பர் ஐடியா கொடுத்த விக்னேஷ் சிவன்
ரஜினி படம்வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் அர்ஜுன். இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாகியிருக்கிறார். ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் அர்ஜுன். படப்பிடிப்பை துவங்குவதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த்.