ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்து பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார்.
கடுமையான விமர்சனங்கள்
ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கின்றார் ரஜினி.
Maaveeran: மாவீரன் படத்திற்காக விஜய் வழியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்..ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!
இதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தன் 171 ஆவது படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் நடித்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றார் ரஜினி. சமீபகாலமாக ரஜினியின் நடிப்பில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
குறிப்பாக கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரஜினி அவ்வளவு தான், இனி அவரின் படங்கள் ஓடாது.பேசாமல் சினிமாவில் நடிக்காமல் வீட்டிலேயே இருந்துவிடலாம் என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள் அவரின் மீது வைக்கப்பட்டன.
பதிலடி கொடுத்த ரஜினி
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினியின் பழைய வீடியோ ஒன்றை அவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் ரஜினி பேசியது, லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி அவ்ளோதான், எல்லாம் முடிந்துவிட்டது. இனி அவர் நடிக்கப்போவதில்லை என சொன்னார்கள்.
இதைத்தான் அவர்கள் கடந்த நாற்பது வருஷமாக சொல்லிக்கொண்டு வருகின்றார்கள் என கூறிவிட்டு தன் ஸ்டைலில் ஒரு சிரிப்பு சிரித்தார் ரஜினி.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்த வீடியோ தான் தற்போது ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று ரஜினி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.