மீண்டும் சாதனை படத்தில் நடித்த ஸ்ரீபிரியங்கா
புதுச்சேரியை சேர்ந்த தமிழ் பெண்ணான ஸ்ரீபிரியங்கா 'ஆசாமி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு 'நிலா மீது காதல்' என்ற படத்தில் நடித்த அவர் 2014ம் ஆண்டு 'அகடம்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம். அதன் பிறகு கங்காரு, வந்தாமல, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு சாதனை படத்தில் நடித்துள்ளார். 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கலைஞர் நகர் என்ற படத்தில் நடித்துள்ளர். 'உளவுத்துறை' ரமேஷ் செல்வனிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த சுகன்குமார் என்பவர் இயக்கி உள்ளார். இதில் பிரியங்காவுடன் பிரஜின், டாலி ஐஸ்வர்யா, கதிர், லிவிங்ஸ்டன், ரவிச்சந்திரன், ரஞ்சித், கே.கே.பிரகாஷ், விஜய் ஆனந்த், பிரபா நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சுகன் குமார் கூறுகையில் “மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. புதுமையாக யோசித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அதிக ரிஸ்க் எடுத்து 22 மணி, 53 நிமிடங்களில் படத்தை இயக்கி முடித்தேன்” என்றார்.