Skoda Kodiaq – 2024 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது

இரண்டாம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உள்ள நிலையில் என்ஜின் தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கோடியாக் எஸ்யூவி விலை ரூ.37.99 லட்சம் முதல் ரூ. 41.39 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பிளக் இன் ஹைபிரிட் 1.5 லிட்டர் TSI , 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் TSI மற்றும் 2.0 லிட்டர் TDI டீசல் எனஜின் இரு விதமான பவர் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்டதாக வரவுள்ளது.

2024 Skoda Kodiaq

முழுமையக மறைக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டுள்ள கோடியாக எஸ்யூவி காரில் ஸ்லாவியா மற்றும் குஷாக்கில் காணப்பட்டதைப் போன்ற புதிய கிரில்லைப் பெறுகின்றது. கோடியாக் ஸ்பில்ட் ஹெட்லேம்ப் டிசைனுடன் தொடர்கிறது மற்றும் இப்போது மேட்ரிக்ஸ் எல்இடி யூனிட்டாகும். முன்பக்க பம்பரை ரேடார் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளதால் ADAS தொகுப்புடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருத்தப்பட்ட டி-பில்லர் மற்றும் டெயில்-லைட்டுகள் மூலம் புதிய தோற்றத்தையும் கொண்டிருக்கும்.

இன்டிரியர் தொடர்பான, படங்களை வெளியிடவில்லை என்றாலும், முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேபின் இருக்கும் என்று ஸ்கோடா கூறுகிறது.  சென்டர் கன்சோலில் ஆதிக்கம் செலுத்துவது 12.9-இன்ச் தொடுதிரை புதிய யூஐ கொண்டு இயங்கும். ‘விர்ச்சுவல் காக்பிட்’ 10.25-இன்ச், அனைத்து டிஜிட்டல் எம்ஐடியுடன் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

kodiaq

கோடியாக் காரின் பரிமாணங்கள் 4,758 mm நீளம் கொண்டுள்ளது. 5-இருக்கை மற்றும் 7-இருக்கை வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது முறையே 61 மிமீ மற்றும் 59 மிமீ நீளம் கொண்டது. 1,864mm அகலம், 1,657mm உயரம் மற்றும் 2,791mm வீல்பேஸ். மூன்றாவது வரிசை பயணிகளுக்கு இப்போது 15 மிமீ கூடுதல் ஹெட்ரூம், 920 மிமீ இருக்கும். 5 இருக்கை மாடல் பூட் ஸ்பேஸ் 910 லிட்டர் கொள்ளளவு மற்றும் 7 இருக்கை வேரியண்ட் பூட் ஸ்பேஸ் 340-845 லிட்டர் கொள்ளளவு வரை இருக்கும்.

ஸ்கோடா கோடியாக் என்ஜின் விபரம்

கோடியாக் எஸ்யூவி காரில் புதிதாக 25.7kWh பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 150hp பவர் வெளிப்படுத்தும், 1.5 லிட்டர் TSI  என்ஜின் கொடுக்கப்பட்டு பிளக் இன் ஹைப்ரிட் ஆப்ஷனை பெறுகின்றது. பேட்டரி மற்றும் என்ஜினுடன் இணைந்து 204hp பவரை வெளிப்படுத்தும். மற்றும் 6-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ  கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

கோடியாக் iV என அழைக்கப்படுகின்ற பிளக்-இன் ஹைப்ரிட், ஸ்கோடாவின் அறிக்கையின்ப் படி, 100 கிமீ ரேஞ்சு ஆனது பேட்டரி மூலம் வழங்கும். பேட்டரியை DC சார்ஜர் கொண்டு 50kW அல்லது AC சார்ஜர் 11kW வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கும்.

அடுத்து, 150hp பவர் வழங்கும் 1.5 TSI பெட்ரோல் கோடியாக் காரில் மைல்டு-ஹைபிரிட் என்ஜின்  அமைப்பு மற்றும் 7 வேக, டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக்கை பெறும். ஸ்கோடா மேலும் கூடுதலான பெட்ரோல் 204hp, 2.0-லிட்டர் TSI இது 7-ஸ்பீடு, டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்புடன் வருகின்றது.

ஸ்கோடா இரண்டு டீசல் பவர்டிரெய்ன் வழங்குகிறது. இரண்டுமே 7-ஸ்பீடு, டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றது. 2.0-லிட்டர் TDI 150 hp மற்றும் அதே நேரத்தில் டாப் வேரியண்ட் 193 hp பவர் வழங்குதுடன் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்பையும் பெறும்.

2023 பிற்பகுதியில் அல்லது அடுத்த வருடத்தில் விற்பனையை தொடங்க ஸ்கோடா செப்டம்பர் மாதத்தில் புதிய கோடியாக் எஸ்யூவி காரை உலகளவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் கோடியாக் அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.