மும்பை: Neena Gupta (நீனா குப்தா) முத்தக் காட்சியில் நடித்த பிறகு டெட்டால் ஊற்றி வாயை கழுவியதாக நடிகை நீனா குப்தா தெரிவித்திருக்கிறார்.
ஹிந்தியில் 1982ஆம் ஆண்டு வெளியான சாத் சாத் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீனா குப்தா. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் அறிமுகமான அதே வருடத்தில் மொத்தம் ஆறு படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். தொடர்ந்து உத்சவ், லைலா, தானியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். படங்களில் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
ரீ என்ட்ரி: காலப்போக்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய 2009ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பதாய் ஹோ, மியூசிக் டீச்சர், தி லாஸ்ட் கலர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக மிஸஸ் சட்டர்ஜி Vs நார்வே படத்தில் நடித்தார். தற்போது அவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜியில் நடித்திருக்கிறார். அந்த ஆந்தாலஜி நாளை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.
யார் யார் நடிக்கிறார்கள்: பால்கி, கொன்கோனா சென் ஷர்மா, சுஜோய் கோஷ், அமித் ரவீந்தர்நாத் ஷர்மா ஆகிய நான்கு பேர் இயக்கியிருக்கிறார்கள். இதில் கஜோல், விஜய் வர்மா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லஸ்ட் ஸ்டோரிஸ் ஏற்கனவே ஹிட்டடித்திருப்பதால் தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நீனா குப்தா பேட்டி: இந்நிலையில் நடிகை நீனா குப்தா முதன்முதலாக லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர், “திலீப் தவானுடன் பல வருடங்களுக்கு முன்பு சீரியல் ஒன்றில் நடித்தேன். அதுதான் இந்திய தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு லிப் லாக் இருந்தது. அதை நினைத்து என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.
நண்பர் அல்ல: திலீப் என்னுடைய நண்பர் இல்லை. அதேசமயம் தெரிந்தவர்தான். அழகாகவும் இருப்பார்தான். ஆனால் முத்தக் காட்சியில் நடிப்பது பிரச்னை. அதற்கு நான் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தயாராக இல்லை. ரொம்பவே பதற்றமாக இருந்தேன். இருப்பினும் நான் ஒரு நடிகை என்பதால் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன்.
டெட்டால் ஊற்றி கழுவினேன்: கேமராவின் முன்பு சிலரால் நகைச்சுவை செய்ய முடியாது. அழ முடியாது. அதையெல்லாம் எனது தலையில் ஏற்றிக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன். எனக்கு அதிகம் தெரியாத ஒருவரை முத்தமிடுவது ரொம்பவே கடினமாக இருந்தது. அந்தக் காட்சியில் நடித்து முடித்த பிறகு டெட்டாலை கொண்டு எனது வாயை சுத்தம் செய்தேன்” என்றார்.