2023 ODI உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்! நம்பிக்கைத் தரும் இந்திய ஆடுகளங்கள்

 

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிரது. இந்த ஆண்டு இறுதியில் 46 நாட்களுக்குள் நடைபெறும் மெகா நிகழ்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. மொத்தம் 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாபெரும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 08 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. 

ஒருநாள் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. இந்த பத்து மைதானங்களில் இந்திய அணியின் ODI சாதனைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 

ICC ODI உலகக் கோப்பை 2023
2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரங்கில் இந்திய அணியின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பல இருந்தாலும், ஒரு நாள் போட்டியில் நடத்தப்பட்ட சாதனைகளை மட்டுமே இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இந்தப் போட்டிகளில், தாய்மண்ணில் உள்ள மைதானங்களில் வீரர்கள் மற்றும அணியின் சாதனைகளை பார்ப்போம்.  

சென்னை
பல ஆண்டுகளாக, இந்த மைதானத்தில் விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் 13ல் டீம் பங்கேற்றுள்ள இந்தியா, ஏழு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளை அடைந்துள்ளது.

பெங்களூரு

இந்த மைதானத்தில் இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்று கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் உள்ளது. ரோஹித் ஷர்மாவின் தரப்பு இந்த மைதானத்தில் தங்கள் ஆதிக்கத்தை தொடரும்.

டெல்லி

19882 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் 13 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2023 ஆம் ஆண்டு ICC ODI உலகக் கோப்பையில் இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது.

அகமதாபாத்
அகமதாபாத் மைதானத்தில் இந்தியா 10 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

புனே
புனேவின் புதிய மைதானத்தில், இந்தியா ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது, அதில் நான்கு ஆட்டங்களில் வென்றது. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.