நாளை (29) கொண்டாடப்படவுள்ள இஸலாமியர்களின் ஹஜ் பெருநாளை (ஈதுல் அழ்ஹா) முன்னிட்டு, நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 30.06.2023 வெள்ளிக் கிழமை அன்று விசேட விடுமுறையினை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறிப்பிட்ட விசேட விடுமுறையினை முன்னிட்டு 08.07.2023 சனிக்கிழமையன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.