2024 டொயோட்டா C-HR கிராஸ்ஓவர் அறிமகமானது

இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா கார்களில் ஒன்றான டொயோட்டா C-HR கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை சி-ஹெச்ஆர் TNGA-C பிளாட்ஃடார்த்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

டொயோட்டாவின் கரோல்லா மற்றும் பிரைஸ் கார்களில் உள்ள TNGA-C பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சி-ஹெச்ஆர் காரில்  மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை பெறுகின்றது.

Toyota C-HR

இரண்டாம் தலைமுறை டொயோட்டா C-HR காரில் ப்ரியஸ் காரில் உள்ள அதே பவர்டிரெய்ன் பெறுகின்றது. 194 hp பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மற்றும் 138 hp பவர் வழங்கும் 1.8 லிட்டர் பேரலல் ஹைபிரிட் மற்றும் 223 hp பவரை வழங்கும் 2.0 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட் கொடுக்கப்பட்டுள்ளது.

2.0 லிட்டர் பேரலல் ஹைப்ரிட் வேரியண்டில் AWD விருப்பம் கிடைக்கும். இந்த காரின் ரியர் வீலில் உள்ள மின்சார மோட்டார் ஜெனரேட்டரின் காரணமாக வழுவழுப்பான சாலைகளில் கூடுதல் இழுவை மற்றும் நிலைத்தன்மையை அளிக்கிறது என டொயோட்டா கூறுகிறது.

ch-r dashboard

C-HR காரில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே மற்றும் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டாப் வேரியண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்க நிலை கார்களில் 8.0-இன்ச் தொடுதிரை சிஸ்டத்தை பெறுகின்றன.

புதிய சி-ஹெச்ஆர் இந்தியா வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.