நட்டநடு ரோட்டில் திடீரென சரிந்து விழுந்த இரும்பு தூண்.. நூலிழையில் தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி!

கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகர் பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். கர்நாடகாவின் வர்த்தக மையமாகவும் சுற்றுலாத் தளமாகவும் உள்ள ஹூப்ளியில் சாலைகளும் எப்போதும் பிஸியாகவே இருக்கும். இந்நிலையில் நேற்று பகல் ஹூப்ளியின் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட இரும்பு தூண் திடீரென சரிந்து விழுந்தது.

ஏராளமான பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லும் அந்த சாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இருப்பு துண் சரிந்து விழுந்தது. அப்போதுதான் சாலையை கடக்க அந்த தூணிற்கு அருகே இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆனால் அந்த வாகனத்திற்கு குறுக்கே தண்ணீர் லாரி ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் கடந்து சென்றதால் அந்த இடத்தை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் காத்திருக்கும் நிலை.

வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையா? என்ன சொல்லப் போகிறது தமிழக அரசு?

அந்த இருசக்கர வாகனத்தால் பேருந்து ஒன்றும் காத்திருந்தது. அவர்கள் புறப்படுவதற்கு சில நொடிகளிலேயே அந்த பிரமாண்ட் இரும்பு தூண் கீழே விழுந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பதறிப்போயினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. நூலிழையில் வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது. சரிந்து விழுந்த இந்த இரும்பு தூண், அங்குள்ள மேல்நிலை ரயில்வே பாலத்தை தாங்கி நிற்கும் தூண் ஆகும். தென்மேற்கு ரயில்வே இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரயில்வே பாலம் எண் 253 ஐப் பாதுகாப்பதற்காக 4.2 மீட்டர் செங்குத்து அனுமதியுடன் இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பக்ரீத் சிறப்பு ரயில்… எங்கிருந்து, எத்தனை மணிக்கு? முழு தகவல் இதோ!

முந்தைய இரவுகளில் சில வாகனங்கள் அதன் மீது மோதியிருக்கலாம் இதனால் அந்த தூணின் கட்டமைப்பு மேலும் பலவீனமடைந்தது, சாலையில் செல்லும் வாகனங்களின் அதிர்வுகள் காரணமாக, கீழே விழுந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த தூண் அகற்றப்பட்டு, புதிய தூண் அங்கு அமைக்கப்படும் என்றும் தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.