ஆபத்தில் மும்பை… அச்சுறுத்தும் மழை.. ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

தென்னிந்திய மாநிலங்களில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தற்போது வடமாநிலங்களிலும் பரவியுள்ளது. 62 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மும்பை மற்றும் டெல்லியில் ஒரே நாளில் கடந்த ஞாயிற்றுக் கழிமை பருவமழை தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே வேலையை காட்ட தொடங்கியுள்ளது தென்மேற்கு பருவமழை.

இமாச்சலில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

கொட்டப்போகும் மழை… ஃபர்ஸ்ட் பவர்பிளே ஆரம்பம்… இன்னையிலேருந்து சென்னைக்கு செம்ம சான்ஸாம்!

மும்பையில் வெளுத்து வாங்கும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையா? என்ன சொல்லப் போகிறது தமிழக அரசு?

ஜூன் 29 ஆம் தேதியான நாளை மற்றும் நாளை மறுநாள் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. மரம் விழுந்ததில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் புனேவுக்கும் நாளை வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு புனேவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் தொடங்கியதுமே கொட்டித் தீர்த்து வருகிறது பருவமழை. இருப்பினும் மும்பையில் 2 வாரங்கள் தாமதாக பருவமழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் இனி பயப்பட வேண்டாம்.. வெளியான முக்கிய அறிவிப்பு… தேவஸ்தானம் அதிரடி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.