புதுடெல்லி,
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :