வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜூலை 13-ம் தேதி சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன் 3ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட்டும் தயார் நிலையில் உள்ளது. பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஜூலையில் விண்ணில் செலுத்துவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே தெரிவித்தார்.,
![]() |
இன்று(28-ம்தேதி) வெளியான அறிவிப்பில், வரும் ஜூலை 13-ல் சந்திராயன் -3 மதியம் 2.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தலிருந்து விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சந்திராயன்- 3 விண்கலத்தை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனை நிறைவு பெற்றுஅனைத்து சோதனைகளும் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement