Indian 2: 'இந்தியன் 2' பார்த்து பிரம்மித்த கமல்: சூர்யாவுக்கு ரோலக்ஸ்.. ஷங்கருக்கு காஸ்ட்லி கிப்ட்.!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘இந்தியன் 2’ படத்தின் சில காட்சிகளை பார்த்துள்ள கமல் இயக்குனர் ஷங்கருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

​இந்தியன் 2கமல் நடிப்பில் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் கமல். கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
​விக்ரம் வெற்றிகமல் நடிப்பில் கடைசியாக ‘விக்ரம்’ படம் வெளியாகி கோலிவுட் சினிமா வியக்கும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் படமாக வெளியான இந்தப்படம் கமலின் சினிமா மார்க்கெட்டை தரமாக உயர்த்தியுள்ளது. ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த கமல், நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
​இந்தியன் 2 படப்பிடிப்புகடந்த 2020 ஆம் ஆண்டே துவங்கப்பட்ட ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து, கொரோனா, ஊரடங்கு போன்ற காரணங்களால் தொடர்ந்து தடைப்பட்டு கொண்டே போனது. இதனையடுத்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் துவங்கப்பட்டது. ஒரே நேரத்தில் இந்தப்படத்தையும், தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தையும் இயக்கி வந்தார் ஷங்கர்.
​கமல் ட்வீட்இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. கரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகாக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி’ என குறிப்பிட்டுள்ளார் கமல்.

​கமலின் பரிசுமேலும், ஷங்கருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ‘விக்ரம்’ பட வெற்றியின் போது அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் பரிசாக வழங்கினார். இந்நிலையில் தற்போது ஷங்கருக்கும் ‘PANERAI’ பிராண்ட் வாட்ச்சை கமல் பரிசளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல் 234’இந்தியன் 2′ படத்தினை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் கமல். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பாவான்கள் ‘கமல் 234’ படத்தில் இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதனிடையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘புராஜெக்ட் கே’ படத்திலும் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.