Maamannan: நாளை வெளியாகும் 'மாமன்னன்'.. கமலின் செயலால் நெகிழ்ந்த உதயநிதி, மாரி செல்வராஜ்.!

உதயநிதி ஸ்டாலின்
நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. நாளை வெளியாகவுள்ள இந்த்ப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே இந்தப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உதயநிதியின் கடைசி படமாக உருவாகியுள்ளது ‘மாமன்னன்’. தமிழ் சினிமாவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் உதயநிதி. அண்மையில் இவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகினார். அரசியலில் முழுக்கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தான் அவரது கடைசி படமாக ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ படத்தின் வாயிலாக பாராட்டுக்களை அள்ளினார். இதனையடுத்து இவரின் மூன்றாவது படைப்பாக தற்போது ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது.

Indian 2: ‘இந்தியன் 2’ பார்த்து பிரம்மித்த கமல்: சூர்யாவுக்கு ரோலக்ஸ்.. ஷங்கருக்கு காஸ்ட்லி கிப்ட்.!

இந்தப்படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட
கமல்
‘மாமன்னன்’ மாரி செல்வராஜின் அரசியல் அல்ல. நம்முடைய அரசியல் என சிலாகித்து பேசினார். இதனால் மாரி செல்வராஜும் நெகிழ்ச்சி அடைந்தார்.

முத்தக்காட்சிக்கு பிறகு டெட்டால் மூலம் வாயை சுத்தம் செய்தேன்: ‘லஸ்ட் ஸ்டோரி 2’ பட நடிகை.!

இந்நிலையில் நாளை ‘மாமன்னன்’ படம் வெளியாகவுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் கமலை சந்தித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். அத்துடன், ‘பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக் கொண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். கமலுக்கு நன்றி தெரிவித்து உதயநிதியும், மாரி செல்வராஜும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.