சென்னை நடு ரோட்டில் காதலருடன் எமி ஜாக்சன் தாறுமாறாக முத்தம் கொடுத்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போனார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் எமி ஜாக்சன் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூவம் அறிமுகமானார்.
அந்த படத்தில் இங்கிலாந்து ராணி போல சும்மா அம்சமாக இருப்பார், எமி ஜாக்சனுக்கு முதல் படமே மிகப்பெரும் வெற்றியை பெற்று, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
எமி ஜாக்சன்: மதராசப்பட்டினம் படத்திற்கு கிடைத்த வரவேற்பால், ஐ, தாண்டவம், கெத்து, 2.0, தங்க மகன், தெறி,2.0 என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் எமி ஜாக்சன்.
ரிலேஷன்ஷிப்பில்: ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையை பெற்றுக்கொண்டார். பின் காதல் 60வது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல, ஜார்ஜூடன காதல் குழந்தை பெற்றுக்கொண்டதும் கசந்து போனதால், அவரை விட்டுபிரிந்தார்.
நட்ட நடுரோட்டில்: தற்போது எமி ஜாக்சன் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை இரண்டு ஆண்டாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. எமி ஜாக்சன் அடிக்கடி காதலனுடன் டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸை அள்ளினார். சமீபத்தில், எமி தனது காதலருடன் நட்ட நடுரோட்டில் நின்று கொண்டு இருவரும் லிப் டூ லிப் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அடக்கன்றாவியே என, உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண வேற இடம் கிடைக்கலயா என கேட்டு வருகின்றனர்.
அச்சம் என்பது இல்லையே : தமிழ் சினிமாவில் நடிகை எமி ஜாக்சன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார் எமி. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.