Erasable ink pen: Complaint against British Prime Minister Rishi Sunak | பேனா சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: அழியக்கூடிய மையால் ஆன பேனாவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்ததால், சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

latest tamil news

இந்நிலையில் ரிஷி சுனாக் வைத்திருக்கும் போன அழியக்கூடிய மையால் ஆனது எனவும் இந்த பேனாவை பயன்படுத்தி குறிப்புகள் எழுதி வருவதும், அரசு ஆவணங்களில் கையெழுத்திடுவதாகவும், எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

பொதுவாக எழுதப் பழகும் நபர்களே இந்த அழிக்கக்கூடிய மை கொண்ட பேனாவை பயன்படுத்துவார்கள். பிரதமர் ரிஷி சுனக் தனது அனைத்து குறிப்புகளை இந்த பேனாவை பயன்படுத்துவதை அந்நாட்டு பத்திரிக்கைகளும் விமர்சித்து வருகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.