Maamannan: மாமன்னனாக நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் இவ்வளவா ? மவுசு குறையாத வைகைப்புயல்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் தன் நகைச்சுவை திறனின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் வடிவேலு. தனக்கென தனி ட்ரெண்டை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்த வடிவேலு தற்போது தன் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார் என சொல்லலாம்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கிய வடிவேலு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் நடித்துள்ள படங்களில் மிக முக்கியமான திரைப்படம் தான் மாமன்னன்.
உதயநிதி
ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலுவும் கிட்டத்தட்ட ஹீரோவிற்கு நிகரான ஒரு ரோலில் தான் நடித்துள்ளார்.

மாமன்னனாக வடிவேலு

அது இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது நமக்கே தெரிகின்றது. மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் வடிவேலு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் வித்யாசமாக நடித்துள்ளார். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Maamannan: மாமன்னன் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்குமா ?ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த உதயநிதி..!

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் வடிவேலு. இந்நிலையில் மாமன்னன் படத்தில் உதயநிதியின் தந்தையாக நடித்துள்ள வடிவேலு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையடுத்து இப்படத்தில் நடிப்பதற்காக வடிவேலு வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வந்துள்ளது. அதாவது மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக வடிவேலு 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என சிலர் பேசி வருகின்றனர். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

வடிவேலுவின் சம்பளம்

மேலும் இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை நடிகராக நடிக்காமல் அழுத்தமான ரோலில் அதுவும் படத்தின் நாயகனுக்கு நிகரான ரோலில் நடித்துள்ளதால் அவரின் சம்பளமும் அதிகமாக இருக்கும் என ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகின்றது. படத்தில் மாமன்னனே வடிவேலு தான் என்பதால் அவருக்கு அதிகமான தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டியிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் இப்படம் வெளியான பின்னர் கண்டிப்பாக வடிவேலுவின் மார்க்கெட் மீண்டும் ராக்கெட் வேகத்தில் கண்டிப்பாக உயரும் என்பதால், அடுத்தடுத்த படங்களுக்கு அவரின் சம்பளமும் கணிசமாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே நாம் வித்யாசமான வைகைபுயலை அவரது இரண்டாவது இன்னிங்சில் பார்க்கலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.