Order to register same-sex marriage | ஒரே பாலின திருமணம் பதிவு செய்ய உத்தரவு

காத்மாண்டு, ஒரே பாலினத் திருமணங்களை தற்காலிகமாக பதிவு செய்யும்படி, நேபாள அரசுக்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த, ஒரே பாலின ஜோடிகள் சிலர், அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்து, உச்ச நீதிமன்றம், 15 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு அளித்தது. ஆனால், இந்த ஒரே பாலினத் திருமணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ப, நேபாள சட்டங்களில் திருத்தம் செய்யவில்லை.

அரசியல் சாசனத்தின்படி, அனைவருக்கும் சம உரிமை உள்ளது. அதுபோல தேசிய சிவில் நடைமுறைகளின்படி, தங்களுக்கு விருப்பமான முறையில் திருமணம் செய்வதற்கு, குடிமக்களுக்கு உரிமை உள்ளது.

ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் வகையில், அவற்றை பதிவு செய்வதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை விசாரித்த அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், ‘ஒரே பாலினத்தவர், திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பித்தால், அதை ஏற்று பதிவு செய்ய வேண்டும்’ என, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.