கான்பூர்: ஸ்டேஷனுக்குள்ளே மருமகள் தலையுடன் நுழைந்த மாமனாரை பார்த்ததும் போலீசாரே திகைத்து போய்விட்டனர்.. என்ன நடந்தது?
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ளது கிராவாலி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ரகுவீர் சிங்… 62 வயதாகிறது.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 மகன்களுக்குமே திருமணமாகிவிட்டது.
ஆனால், இவரது மூத்த மகன் சமீபத்தில் இறந்துவிட்டார்.. இருந்தாலும், அவரது மனைவி, மாமனார் ரகுவீர் சிங் வீட்டிலேயேதான் வசித்து வந்துள்ளார்.
கூட்டுக்குடும்பம்: அதேபோல, 2வது மகன் பெயர் கவுரவ் சிங்.. இவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.. பருக்காபாத் போலீஸ் ஸ்டேஷனில் வேலைபார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் பிரியங்கா.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்..
அனைவருமே ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.. ஆனால், இதில், 2 மருமகள்களுக்கும் எப்ப பார்த்தாலும் சண்டை வருமாம்.. தினமும் இவர்களிடையே தகராறு வெடிப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. 2 மருமகள்கள் சண்டை போட்டுக்கொள்வதும், மாமனார் ரகுவீருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்துள்ளது… 2 பேருக்கு அட்வைஸ் செய்தாலும், அதை காதிலேயே போட்டுக் கொள்வதில்லையாம்..
மருமகள்கள்: ஆனால், மூத்த மருமகள் விதவையாக உள்ளபோது, அவரிடம் இளைய மருமகள் பிரியங்கா தகராறு செய்தது, ரகுவீர்சிங்குக்கு பிடிக்கவில்லை.. அதனால், மூத்த மருமகளிடம் சண்டை போட வேண்டாம் என்று ரகுவீர் சொல்லி வந்திருக்கிறார்..
இப்படித்தான், கடந்த ஜூன் 26ம் தேதி இரவு, மறுபடியும் 2 மருமகள்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது வழக்கம்போல் மாமனார் சமாதானப்படுத்தியுள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த இளைய மருமகள் பிரியங்கா, மாமனாரையும் சேர்த்து தாக்கியதாக தெரிகிறது.
இது மாமனாருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது.. ஏற்கனவே பிரியங்கா மீது ஆத்திரத்தில் இருந்த ரகுவீர், தன்னை தாக்கியதால், மேலும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்… விடிய விடிய தூங்காமலும் இருந்துள்ளார்.. மறுநாள் காலை பிரியங்கா சமைத்துக் கொண்டிருந்திருந்தார்.. அப்போது ரகுவீர், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துவந்து, பிரியங்காவின் தலையில் வீசி துண்டாக்கிவிட்டார்..
கையில் தலை: அதற்கு பிறகு, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்.. கையில் மருமகளின் தலையுடனும், ரத்தக்கறையுடனும், சென்று தாமாகவே சரணடைந்துள்ளார்.
இதில் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், இந்த சம்பவத்தின்போது பிரியங்காவின் கணவர் கவுரவ், அதே போலீஸ் ஸ்டேஷனில்தான் டியூட்டியில் இருந்துள்ளார்.. மனைவியின் தலையுடன் வந்து நின்ற அப்பாவை பார்த்ததும், அதிர்ந்துபோனார் கவுரவ்.. உடனடியாக போலீசார் வீட்டுக்கு விரைந்து சென்று, பிரியங்காவின் சடலத்தையும் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. மாமனார் ரகுவீரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்..
ரத்தம் சொட்ட சொட்ட: இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்திய நிலையில், அந்த எப்ஐஆரில் கணவர் கவுரவ் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்திருக்கிறார்களாம்.. மருமகளின் துண்டிக்கப்பட்ட தலையுடன், ஸ்டேஷனில் மாமனார் சரணடைந்த சம்பவம் ஆக்ராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.