ஜோதிகாவை தொடர்ந்து ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட தீபா வெங்கட்
சினிமாவில் சில படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்தவர் தீபா வெங்கட். ஒரு கட்டத்தில் அவர் முழு நேர டப்பிங் ஆர்ட்டிஸ்டாகி விட்டார். அந்த வகையில் வேற்று மாநிலங்களில் இருந்து தமிழுக்கு வந்த பல முன்னணி நடிகைகளுக்கு அவர்தான் டப்பிங் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக, ஐஸ்வர்யா ராய், ஜோதிகா , சிம்ரன், நயன்தாரா, அனுஷ்கா, சினேகா , காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு தீப வெங்கட்தான் குரல் கொடுத்தார். இப்படி பல நடிகைகளுக்கும் வகைப்படுத்தி டப்பிங் பேசக்கூடிய திறன் பெற்ற தீபா வெங்கட், தற்போது ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா தான் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், தற்போது தீபா வெங்கட் வெளியிட்டுள்ள இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.