ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் தான் இயக்கிய ஒரு சில படங்களிலேயே ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பல வருடங்கள் பணியாற்றிய மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி தனி கவனம் பெற்றார் மாரி செல்வராஜ். இவ்விரு படங்களும் வசூல் ரீதியாக மட்டும் வெற்றி பெறாமல் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
தாக்கத்தை ஏற்படுத்திய மாரி செல்வராஜ்
எனவே மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்தார். இந்நிலையில் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையில் வெளியாகியுள்ளது.
Maamannan: மாமன்னன் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்குமா ?ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த உதயநிதி..!
இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன் பட ப்ரோமோஷன்களுக்காக பல பேட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றார்.அந்த வகையில் அவர் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் தளபதி விஜய்யை பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார். சிறு வயதில் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்த மாரி செல்வராஜ் விஜய்க்காக ரசிகர் மன்றம் எல்லாம் வைத்துள்ளார்.
மேலும் விஜய்யின் படத்தை முதல் நாள் முதல் ஷோவை பார்த்த நிகழ்வுகளை எல்லாம் பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ் அவரிடம் கதை கூறிய விஷயத்தை பற்றியும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, விஜய்யின் தீவிர ரசிகரான நான் விஜய்யிடம் கதை கூறியுள்ளேன். விஜய்யை திரையில் பார்த்து ரசித்த எனக்கு அவருக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.
எதிர்கால திட்டம்
நான் என் பாணியில் ஒரு கதையை விஜய்யிடம் கூறினேன். அவர் கேட்டுவிட்டு ஷாக்காகிவிட்டார். இருந்தாலும் நாங்கள் கண்டிப்பாக எதிர்காலத்தில் இணைவோம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் மாரி செல்வராஜ் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார் என்பது இதன் மூலமே தெரியவந்துள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
விஜய்யை இயக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்க அந்த வரிசையில் மாரி செல்வராஜும் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் விஜய் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி இணைந்தால் எப்படி இருக்கும் என கணிக்க துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.