எடப்பாடியும், கொங்கு மண்டலமும்… இனிமே தான் ஆட்டமே… பெரிய பிளானுடன் களமிறங்கும் அதிமுக!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கால் மூட்டு வலி. இதனால் தனது சொந்த ஊரான சேலத்தில் சுமார் 3 வாரங்களாக ஓய்வெடுத்து வந்தார். இந்த சூழலில் திமுக அமைச்சர் கே.என்.நேரு எடப்பாடி கோட்டைக்குள் புகுந்து சூறாவளியாக மக்களவை தேர்தல் வேலைகளை தொடங்கி விறுவிறுப்பு காட்ட ஆரம்பித்தார். இதை கவனித்த எடப்பாடி இனியும் பொறுத்திருக்க முடியாது என முடிவு செய்து வலியை பொருட்படுத்தாமல் அரசியல் களத்தில் குதித்திருப்பதாக அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர்.

சேலத்தில் சூறாவளி பயணம்சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதைக் கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆடிப் போய்விட்டதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். சேலத்தை பொறுத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அதில் 10 அதிமுக கூட்டணி வசமுள்ளது. மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் என மூன்று தொகுதிகளுக்குள் சேலம் மாவட்டத்தின் பகுதிகள் பிரிந்து காணப்படுகின்றன.​கொங்கு மண்டல ஸ்கெட்ச்இவை மூன்றிலும் திமுகவின் ஆதிக்கமே இருக்கிறது. இதை திருத்தி எழுத எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். கொங்கு மண்டலம் என்றாலே அதிமுகவின் கோட்டை என்று எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் லேசாக சறுக்கினாலும் மீண்டும் அதிமுக எழுந்து வந்து விடுகிறது. அதை வரும் மக்களவை தேர்தலில் நிரூபித்து காட்ட எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
எடப்பாடியின் அடுத்த டார்கெட்2024 மக்களவை தேர்தல் தான் எடப்பாடிக்கு அடுத்த டார்கெட். இதற்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே தமிழகம் தழுவிய அளவில் அதிமுகவின் வாக்கு வங்கியை கீழ்மட்ட அளவில் இருந்து மேல்மட்டம் வரை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக சில வியூகங்களை கட்சியினர் மத்தியில் செட் செய்வதற்கு எடப்பாடி மும்முரம் காட்டி கொண்டிருக்கிறார்.
உறுப்பினர் சேர்க்கையும், பூத் கமிட்டியும்ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சியினருக்கு முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் மாவட்ட செயலாளர்களின் நகர்வுகளை நேரடியாகவே எடப்பாடி கவனித்து வருகிறார். அடுத்தகட்டமாக, பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது. சரியான நபர்களை வைத்து வார்டு, வார்டாக சென்று மக்களிடம் திமுக ஆட்சியின் குறைகளை சுட்டி காட்டுவது, கடந்த அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை விளக்கி கூறுவது.
​திமுக எதிர்ப்பு அரசியல்இதற்காக சிறிய அளவிலான கூட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது பகுதி சார்ந்த பிரச்சினைகளை அடையாளம் கண்டு சரிசெய்ய உறுதிமொழி கொடுத்து, அவர்களின் நம்பிக்கையை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக திமுக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கவுள்ளனர். இதுதொடர்பாக எல்லா மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தி மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்க முடிவு செய்துள்ளனர்.அந்த இரண்டு விஷயங்கள்மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களுக்கும் தானே முன்னுதாரணமாக திகழும் வகையில் நேரடியாக களத்தில் குதிக்கவும் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அதேசமயம் இரண்டு விஷயங்களை தனது நம்பிக்கைக்கு உரிய சீனியர்களை வைத்து தீவிரமாக கவனித்து வருகிறார். ஒன்று, பாஜக. மற்றொன்று ஓ.பன்னீர்செல்வம். இதில் ஓபிஎஸ் என்ன தான் தீவிரம் காட்டினாலும் தேர்தல் ஆணையம் தனக்கு அங்கீகாரம் அளித்ததை நினைத்து சற்றே தெம்புடன் காணப்படுகிறார்.
​பாஜகவின் சீட் கணக்குஇருப்பினும் சீனியர்கள் மூலம் ஓபிஸ் நகர்வுகள் மீது ஒரு கண் வைத்திருக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் பாஜக விஷயத்தை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. 25 மக்களவை தொகுதிகளில் பாஜக போட்டி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்த போது ஒரு பேச்சு கிளம்பியது. அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு அப்படி ஒரு முடிவை பாஜக தனியாக எடுக்க முடியாது. கேட்டலும் கொடுப்பதற்கு அதிமுக முன்வராது. எனவே கடைசி நேர குடுமி பிடி சண்டைகள் வர வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் தற்போதே உஷாராக வேண்டும் என்று எடப்பாடி கணக்கு போட்டு வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.