திருவனந்தபுரம்:கேரளாவில், தந்தையிடம் மகள் வாங்கிய லாட்டரிக்கு, 75 லட்சம் ரூபாய் முதல் பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநிலம், பத்தணந்திட்டா மாவட்டம், அரூரை சேர்ந்தவர் அகஸ்டின்; லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் ஆஷ்லிக்கு திருமணமாகி விட்டாலும் கணவர், குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். தந்தை கடைக்கு செல்லும் ஆஷ்லி, அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவார். அந்த வகையில் நேற்று முன்தினம் குலுக்கல் நடைபெற்ற லாட்டரியில் 12 சீட்டுகள் வாங்கினார்.
இதில், எஸ்.ஜி. 883030 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு 75 லட்சம் ரூபாய் முதல் பரிசு கிடைத்தது. பரிசும், ஏஜன்ட் கமிஷனும் ஒரே குடும்பத்துக்கு கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement