கர்நாடகா மாநிலத்தின் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ்வே சாலையை கட்டமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்தது. அதன்படி, பெங்களூரு – மைசூரு இடையில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு எக்ஸ்பிரஸ்வே சாலை போடப்பட்டு பயண நேரத்தை ஒன்றரை மணி நேரம் குறைத்து வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே
இதில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், மெதுவாக செல்லக் கூடிய வாகனங்களுக்கு அனுமதி இல்லை. 6 வழிச்சாலையாக 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இருபுறமும் சர்வீஸ் சாலைக்காக இருவழிப் பாதை போடப்பட்டது. இது கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையில் 8 கிலோமீட்டர் நீள மேம்பாலங்கள், 42 சிறிய பாலங்கள், 64 சுரங்க வழி சாலைகள், 11 ஓவர் பாஸ் சாலைகள், 4 சாலை மேல் குறுக்காக செல்லும் பாலங்கள், 5 பைபாஸ் சாலைகள் அமைந்துள்ளன.
நிதகட்டா அருகில் டோல்கேட்
பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் பெங்களூரு – நிதகட்டா இடையில் டோல்கேட் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் மைசூரு – நிதகட்டா இடையில் புதிதாக ஒரு டோல்கேட்டை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த டோல்கேட் ஸ்ரீரங்கபட்னா அருகில் கானங்கூரில் அமைக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜூலை 1ஆம் தேதி காலை 8 மணி முதல் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு முறை சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வாகன ஓட்டிகள் ஆளாவர்.
தற்போது பெங்களூரு – நிதகட்டா இடையில் அமைந்துள்ள டோல்கேட்டில்,
வாகனங்கள்ஒருவழிப் பயணத்திற்கு கட்டணம்இருவழிப் பயணத்திற்கு கட்டணம்கார்/ எஸ்.யூ.வி/ வேன்கள்165250எல்.சி.வி/ எல்.ஜி.வி/ மினி பேருந்துகள்270405ட்ரக்குகள்/ பேருந்துகள்565850
புதிதாக திறக்கப்படவுள்ள நிதகட்டா – மைசூரு இடையிலான டோல்கேட்டில்,
வாகனங்கள்ஒருவழிப் பயணத்திற்கு கட்டணம்இருவழிப் பயணத்திற்கு கட்டணம்கார்கள்/ எஸ்.யூ.வி/ வேன்கள்155235எல்.சி.வி/ எல்.ஜி.வி/ மினி பேருந்துகள்235375ட்ரக்குகள்/ பேருந்துகள்525790
மாதாந்திர பாஸ்
மேற்குறிப்பிட்டவாறு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. டோல்கேட்டில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் சென்று திரும்பும் வாகனங்கள் 330 ரூபாய்க்கு மாதாந்திர பாஸ் எடுத்து கொள்ளலாம். புதிய டோல்கேட் அமைக்க கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
ஜூலை 1 முதல் அமல்
ஜூலை 1ஆம் தேதி திறப்பு விழாவிற்கு தயாராகி விட்டது. மேற்குறிப்பிட்ட வகையில் இரண்டு முறை சுங்ககட்டணம் செலுத்துவது வாகன ஓட்டிகளுக்கு தான் சுமையாக மாறியுள்ளது. இதுதொடர்பாக பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தரப்பு, பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் ஹனகெரே சுரங்க வழிச்சாலை, அமராவதி ஓட்டல் அருகில் நுழைவு வாயில் ஹொசல்புதானூர் பகுதியில் நுழைவு வழி, சிக்க மாண்டியா மற்றும் ஓல்டு பெங்களூரு – மைசூரு சாலை ஆகியவற்றில் கால்வாய் பகுதியை விரிவாக்கம் செய்வது ஆகியவற்றை சொல்லலாம். அதற்குள் சுங்கக்கட்டணம் வசூலிக்க தயாராகிவிட்டார்கள். இது சரியல்ல என்று விமர்சித்தனர்.