அடித்து வெளுக்கும் மழை… வெள்ளக்காடான மும்பை… பயங்கர ட்ராஃபிக்கால் திணரும் மக்கள்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா முதல் ஹிமாச்சல் வரை தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருவதால் பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 2 வாரங்கள் தாமதமாக கடந்த ஞாயிற்றுக் கிழமைதான் தென்மேற்கு பவருமழை தொடங்கியது. இருப்பினும் தொடங்கிய உடனேயே பருவமழை நல்ல வேகமெடுத்துள்ளது. மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

சைலன்ட்டாக சம்பவம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்!

மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக போரிவ்லி மற்றும் தஹிசார் ஆகிய வழித்தடங்களில் பெஸ்ட் பேருந்துகள் திருப்பி விடப்பட்டன. இதேபோல் தானே மற்றும் வந்தனா பகுதிகளிலும் பேருந்து வழித்தடங்கள் மாற்றி திருப்பி விடப்பட்டன.

கனமழையால் அந்தேரி சப்வே தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து அந்த பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த மழையால் மும்பை மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணிநேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோயின் ஆன பிறகு ஆளே மாறிப்போன விஜே அர்ச்சனா…

மேலும் மலாட் மற்றும் கோரேகானில் மரம் முறிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். இதனிடையே மகாராஷ்டிராவின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம், `ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது. மும்பையை ஒட்டியுள்ள தானே, ராய்காட், பால்கர் மற்றும் ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் நாசிக் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 முதல் 4 நாட்களுக்கு கொங்கனின் சில பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மலை பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மும்பைக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாதி மாறி காதலித்த மகள்… கழுத்தை நெரித்து கொன்ற கொடூர அப்பா… ரயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.