வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இதை எதிர்பார்க்கல… ஸ்பீடும், டிக்கெட் கட்டணமும்… வெடித்த சர்ச்சை!

2024 மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு நகர்வும் நாட்டு மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நாட்டின் அதிவேக ரயில் சேவை என்று அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு அடுத்தடுத்து அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் பிரதமர் மோடியே முன்னின்று ஒவ்வொரு ரயிலையும் தொடங்கி வைத்து வருகிறார்.

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற பாஜகவினர்!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகளை பற்றி சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உள்நாட்டு தயாரிப்பு, நவீன வசதிகள், பயணிகளுக்கு சவுகரியமான அம்சங்கள், அதிவேகம், விமானப் பயணம் போன்ற அனுபவம் எனப் பலவற்றை பயணிகள் கூறி வந்தனர். இந்த சூழலில் புதிய விமர்சனம் ஒன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

ரயிலின் வேகம்

இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், குறைந்த வேகமும், அதிக டிக்கெட் கட்டணமும் என்கின்றனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே மற்ற ரயில்களை காட்டிலும் செம ஸ்பீடு என்று தானே சொல்வார்கள். அப்புறம் எப்படி குறைந்த வேகம் என்கிறீர்கள் எனக் கேட்கலாம். அதாவது, மத்திய அரசு அறிவித்த வேகத்துடன் தற்போதைய நிலவரத்தை ஒப்பீட்டு பார்க்க வேண்டும்.

மத்திய அரசு அறிவிப்பு

இதை ரயில் பயணிகள் பலரும் தங்கள் செல்போன் மூலம் செக் பண்ணி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பார்க்கலாம். அதன்படி, தற்போது 63 கிலோமீட்டர் முதல் 96 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் பெரும்பாலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் மத்திய அறிவித்தது 110 கிலோமீட்டர் முதல் 130 கிலோமீட்டர் வரையிலான வேகம்.

சதாப்தி, ராஜ்தானி ரயில்கள்

உதாரணமாக மும்பை – ஷீரடி வழித்தடத்தை எடுத்துக் கொண்டால் சராசரியாக 64 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் செல்கின்றன. இதன்மூலம் 5.25 மணி நேரத்தில் இலக்கை அடைந்து விடுகின்றன. ஆனால் முழு திறனுடன் ரயிலை இயக்கினால் 3.25 மணி நேரத்தில் செல்ல முடியும் எனக் கூறுகின்றனர். இதுபற்றி பயணிகள் கூறுகையில், இந்த அளவிற்கு வேகத்தில் ரயிலை இயக்கினால் நாங்கள் சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் சென்று விடலாமே? அதில் கட்டணம் சற்று குறைவாக இருக்கும்.

உள்கட்டமைப்பு வசதிகள்

வேகமும் நன்றாக இருக்கும். எதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் செல்ல முடியும். நீண்ட தூரம் போகும் போது நிறைய சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். ரயில்வே தரப்பை கேட்கையில், ரயில் தண்டவாள உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும். அதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. முதலில் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதன்பிறகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை முழு திறனுடன் இயக்க முடியும் என்று பதிலளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.