Maamannan review: மாமன்னன் விமர்சனம்..வெற்றியுடன் விடைபெற்றாரா உதயநிதி ?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான
உதயநிதி
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். படத்திற்கு படம் ஒரு நடிகராக முன்னேறி வந்த உதயநிதி தற்போது நடிப்பில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கின்றனர்.

எனவே மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படமே அவர் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். அதன் பின் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு வீச்சாக செயல்பட இருப்பதாக அறிவித்தார் உதயநிதி.

இந்நிலையில் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் இன்று திரையில் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதியே தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குறிப்பாக வடிவேலு இப்படத்தில் தன் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மாமன்னன் திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

Maamannan: மாமன்னன் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்குமா ?ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த உதயநிதி..!

படத்தின் பலமே வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பு தானாம். மேலும் படத்தின் கதைக்களம் மற்றும் மேக்கிங் சிறப்பாக இருக்கின்றதாம். உதயநிதி நடிப்பும் அருமையாக இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷிற்கு அந்தளவிற்கு கனமான கதாபாத்திரம் இல்லை எனவும் படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம். பொதுவாக மாரி செல்வராஜ் படங்களில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இப்படத்திலும் இருப்பதாகவும், ஆனால் ஏதோ ஒன்று குறைவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். படத்தில் எமோஷனல் கனக்ட் சற்று குறைவு என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.

ஸ்கோர் செய்த வடிவேலு

என்னதான் மாமன்னன் திரைப்படம் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்தாலும் மாரி செல்வராஜின் முந்தைய படங்களில் இருந்த அந்த எமோஷனல் கனக்ட் இப்படத்தில் இல்லை என்பதே பலரது கருத்தாக இருக்கின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மொத்தத்தில் மாமன்னன் திரைப்படம் ஆஹா, ஓஹோ என சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும், ஒரு நல்ல படமாகவே இருப்பதாக ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை கூறி வருகின்றனர். எனவே உதயநிதி ஒரு நல்ல படத்தை கொடுத்துவிட்ட திருப்தியோடு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.