16 வருஷம் திருமண வாழ்க்கை..கடைசியில் ஒண்ணும் இல்லாமல் போனது..ரேவதியின் விவாகரத்துக்கு இதுதான்காரணமா?

சென்னை: 16 ஆண்டுகாலம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த தற்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியே வாழ்ந்து வருகிறார். இருவரின் பிரிவுக்கான காரணம் தற்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகி உள்ளது.

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரேவதி. ரஜினி, கமல், கார்த்தி, மோகன், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் எடுத்தார்.

தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம், இந்தி,மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு சில படங்களை இயக்கியும் உள்ளார்.

நடிகை ரேவதி: 80ஸ் காலகட்டத்தில் பிரியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை ரேவதி, 1986 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன் கணவர் இயக்கிய புதிய முகம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணுக்கு மை அழகு என்ற பாடல் தற்போது வரை அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது.

காதல் திருமணம்: மகிழ்ச்சியாக தொடங்கிய இவர்களது திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று அனைவரும் நினைத்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு விவரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். இதைடுத்து, இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை: இதையடுத்து ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்று கூறப்பட்டது. அவள் என் தத்துக்குழந்தை இல்லை மஹியை நான் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தை என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொண்டேன். அந்த குழந்தை தான் மஹி அவள் என் சொந்த மகள் என்று கூறியிருந்தார்.

பிரிவுக்கு காரணம் இதுதான்: அண்மையில்க யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை ரேவதி, திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் திருமணமாகி 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம், குழந்தை இல்லை என்ற காரணத்தால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக கூறியிருந்தார். தற்போது, ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.