பயத்தின் வெளிப்பாடு… சோகக் கதைய சொல்ல முடியுமா? அண்ணாமலையை மறைமுகமாக சீண்டும் எஸ்வி சேகர்!

பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்வி சேகர் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையை தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து மறைமுகமாக விளாசி வருகிறார். பல நேர்க்காணல்களில் அண்ணாமலை குறித்து பகிரங்கமாகவே விமர்சித்து வருகிறார்.

அண்ணாமலை கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் மதிப்பதில்லை என்றும் அண்ணாமலைக்கு பிராமணர்களை கண்டாளே பிடிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார். பிராமணர்களின் பலத்தை காட்ட அவர்களுக்கு என தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார் எஸ்வி சேகர்.

தொடர்ந்து ஆட்டுக்குட்டி படங்களை ஷேர் செய்தும் அண்ணாமலையை மறைமுகமாக சீண்டி வருகிறார் எஸ்வி சேகர். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார். அப்போது தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் பதுக்கத்தான் அண்ணாமலை லண்டன் சென்றிருப்பதாக மறைமுகமாக கூறியிருந்தார் எஸ்வி சேகர்.

இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய அண்ணாமலையிடம், லண்டனில் செந்தில் பாலாஜியின் சகோதரரை தாங்கள் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளதே என ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்க, கொதித்துவிட்டார் அண்ணாமலை. யார் சொன்னது? யார் சொன்னது என கேட்டு அவரை ஒரு வழியாக்கிவிட்டார்.

இந்நிலையில் அந்த சம்பவத்தை வைத்து அண்ணாமலையை மறைமுகமாக சாடியிருக்கிறார் எஸ்விசேகர். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், கேள்வி கேட்டா பதில் சொல்லணும். உனக்கு யார் தகவல் கொடுத்ததுன்னு கேட்கிறது பயத்தின் வெளிப்பாடு. அகந்தை. ஆம் இல்லை இதான் பதில். சம்பாதிச்சு பதுக்கலான்னு போன இடத்துல ஹெட் ஆபீஸ் மேனேஜர் எல்லாத்தையும் மரியாதையா திருப்பி கொடுத்துடுன்னு மிரட்டி எடுத்துட்டாங்கனு சோகக்கதையை சொல்ல முடியுமா. என பதிவிட்டுள்ளளார்.

மேலும் ஆடு ஒன்றின் படத்தையும் பகிர்ந்துள்ளார் எஸ்வி சேகர். மற்றொரு பதிவில் ED, INCOME TAX இவங்களுக்கு தகவல் கொடுக்கிறவங்க பேரையே வெளியில சொல்லமாட்டாங்க. இந்த அடிப்படை அறிவு இல்லாதவங்க அடுத்தவனுக்கு பாடம் எடுக்க ஆசைப்படுறது ரொம்ப தப்பு. நேரம் நெருங்குது. ஜோதி பிரகாசமா எரியுது. பண்டிகைக்கு பிரியாணி ஆகாம தப்பிச்ச குஷி. ஒரே உளறல். Basement Weak என குறிப்பிட்டு பணக்கட்டுகள் குவிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

எஸ்வி சேகரின் இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.