யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்? கோவை டூ சென்னை… வேற லெவல் போலீஸ் ஸ்பெஷலிஸ்ட்!

ஜூன் 29, 2023… தமிழக அரசியலில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. நிர்வாக ரீதியில் முதலமைச்சர்

பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நாள். முதலில் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவரது இடத்தில் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

சல்யூட் அடித்த சைலேந்திர பாபு

சென்னை சிட்டி காவல் ஆணையர்

இதன் தொடர்ச்சியாக தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவரது இடத்திற்கு சங்கர் ஜிவால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் சங்கர் ஜிவால் வகித்து வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஐபிஎஸ் பேட்ச் 1992

யார் இவர் என்ற தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. இதுபற்றிய விவரங்களை ஊடகங்கள் சேகரித்து திகட்ட திகட்ட தலைப்பு செய்திகளாக அளித்து கொண்டிருக்கின்றன. சந்தீப் ராய் ரத்தோர் 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர்.

கோவை டூ தூத்துக்குடி

கோவை துணை ஆணையராக பணியாற்றியவர். 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றினார். 2000 காலகட்டத்தில் பராமரிப்பு செலவை குறைக்கும் வகையில் சிக்னல் விளக்குகளுக்கு பதில் எல்.இ.டி சிக்னல்களை அறிமுகம் செய்தார். இது பெரிதும் வரவேற்பை பெற்றது.சிபிசிஐடி எஸ்.பியாக 2003 காலகட்டத்தில் பணிபுரிந்தார். அப்போது முத்திரை தாள் மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதை விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் முக்கியமான அதிகாரியாக திகழ்ந்தார்.2005ல் தூத்துக்குடி எஸ்.பி, 2010ல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜி, 2016ல் கடலோர பாதுகாப்பு குழும ஐஜி, 2019ல் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

என்கவுன்ட்டர் டூ சென்னை சிட்டி

2014 சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் போது தேசிய மீட்பு படை தலைவராக இருந்தார். அப்போது விரைந்து செயல்பட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.வழக்கு ஒன்றில் என்கவுன்ட்டர் செய்த அனுபவம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தின் முதல் ஆணையர் என்ற பெருமையை பெற்றார். கடைசியாக சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரியில் டிஜிபியாக பதவி வகித்தார். இந்த சூழலில் தான் சென்னை மாநகர டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது சட்டம், ஒழுங்கு தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.