நீங்களும் நானும் அடிச்சுக்குறதுக்காக படம் எடுக்கணுமா? மாமன்னன் படத்தை மோசமாக விமர்சித்த நபர்!

சென்னை: மாமன்னன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் படம் பார்த்த இளைஞர் ஒருவர் படத்தை படுமோசமாக விமர்சித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் தரமான சம்பவத்தை நிகழ்த்திவிட்டார் என்று படத்திற்கு சமூக வலைத்தள பக்கத்தில் நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது.

எனக்கு பிடிக்கல: இந்நிலையில் மாமன்னன் படம் பார்த்துவிட்டு திரையரங்கில் செய்தியாளர்களிடம் படம் குறித்து பேசிய இளைஞர் ஒருவர், மாமன்னன் படத்தில் தேவையில்லாத அரசியலை மாரி செல்வராஜ் சொல்லி இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்ததை இப்போதும் நடக்கிறது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னைக்கு நீங்களும் நானும் நல்லாத்தானே இருக்கோம் அடிச்சிக்கிட்டு இருக்கோமா?

முழுக்க முழுக்க சாதிப்படம்: மாமன்னன் முழுக்க முழுக்க சாதிப்படம் , கேவலமான சாதிப்படம் இந்த படத்தின் மூலம் அவர் சாதி வெறியை தூண்டிவிடுகிறார். படம் எடுப்பதே நீங்களும் நானும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நீங்களும் நானும் அடிச்சுக்குறதுக்காக படம் எடுக்கணுமா? மாரி செல்வராஜ் நல்ல திரைப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், இப்போ ரொம்ப மோசமா போய் கொண்டிருக்கிறார்.

Maamannan Movie Creates Fight Between each one of us, says film critic

வடிவேலுதான் ஹீரோ: வடிவேல் ரொம்ப நல்ல நடிச்சி இருக்கிறார். மாமன்னன் படத்தில் ஹீரோவே ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக்கும் வடிவேலும் தான், மற்றபடி கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். உதயநிதி வழக்கமான நடிப்பை கொடுத்து இருக்கிறார் என்று மாமன்னன் படத்தை படுமோசமாக விமர்சித்துள்ளார்.

படம் சூப்பர்: ஆனால், படம் பார்த்த மற்ற ரசிகர்கள் மாரி செல்வராஜின் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெரும், வடிவேலு சும்மா பின்னியிருக்கிறார். மியூசிக், மாரி செல்வராஜின் ஸ்க்ரீன்பிளே,உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் என அனைவரின் நடிப்பும் சூப்பர், மாமன்னன் வேறலெவல் படம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.