மாமன்னன் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி மிகப்பெரிய வெற்றி பெரும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்
ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று பல தரப்பினர் கூறி வரும் நிலையில் குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அதிருப்தி அலையும் வீசுகிறது.
இதற்கு படத்தின் ஆடியோ லான்ச் அப்போது மாரி செல்வராஜ் பேசியதும் காரணம். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி தனது சினிமா பயணம் குறித்து எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாமன்னன் மிக சிறப்பான படமாக அமையும். உதயநிதி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். அமைச்சர் பதவியில் இருக்கும்போது நடிப்பதில் எந்த தடையும் இல்லை. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று உதயநிதி தனது முடிவை பரிசீலினை செய்ய வேண்டும்’ என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
மாமன்னன் படம்தான் தனது கடைசி படம் என்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும்பட்சத்தில் அடுத்த படத்தில் நடிக்க முயற்சிப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சட்டத்துறை அமைச்சர் சட்டம் குறித்து அந்த அளவுக்கு விளக்கம் அளிக்காமல் உதயநிதியை தொடர்ந்து நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் வருகின்றன.