மூணாறு:”மூணாறு ஊராட்சியில் மத்திய அரசின் இரண்டு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன” என இடுக்கி எம்.பி.டீன் குரியாகோஸ் தெரிவித்தார்.
பட்டியல் இனத்தவர் 50 சதவிகிதத்திற்கு மேல் வசிக்கும் கிராமப்புறங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை மூணாறு ஊராட்சியில் செயல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து எம்.பி. டீன் குரியாகோஸ் கூறியதாவது: மூணாறில் மத்திய அரசின் 152 சிறிய பெரிய அளவு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட உள்ளன. இதனால் ஊராட்சிக்குட்பட்டுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.
சுற்றுலாவில் உலக அளவில் பிரசித்தி பெற்றும்அடிப்படை வசதிகள் இன்றி சிக்கி தவிக்கும் மூணாறு நகருக்கு இத்திட்டங்கள் மூலம் இனி விடிவு காலம் பிறந்துஉள்ளது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement