Negotiations with Tamil Nadu Government: D.K.Sivakumar | தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை: டி.கே.சிவக்குமார்

பெங்களூரு: மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எழுதிய கடிதம்: கர்நாடக அரசின் நீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீதிமன்றத்தில் நேரடியாக தீர்ப்பாயம் அமைக்கிறோம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரு மாநில அரசுகளிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஆட்சி அமைத்து ஒரு மாத காலமே ஆவதால், கர்நாடகா மக்களின் நிலையை எடுத்துரைக்க கால அவகாசம் வேண்டும். உச்சநீதிமன்றத்தில் 12 வாரம் அவகாசம் கேட்டு, அதற்குள் புதிய நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சிவக்குமார் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.